அவபெயர் பெற்ற அமெரிக்கத் தேசிய ஜனநாயக நிதியம்
2022-04-01 17:54:47

அண்மையில் அமெரிக்கத் தேசிய ஜனநாயக நிதியத்தின் தலைவர் டேமன் வில்சன் தலைமையிலான குழுவினர்கள், சீனாவின் தைவானில் பயணம் மேற்கொண்டு, உலகளவில் வண்ணப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகப் பரப்புரை செய்தார்.

மத்திய ஆசியா, வட ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட பல பிரதேசங்களில் நிகழ்ந்த வண்ணப் புரட்சியில், அமெரிக்கத் தேசிய ஜனநாயக நிதியம் பங்காற்றியுள்ளது. சீனாவின் ஹாங்காங், தைவான், சின்ச்சியாங் உள்ளிட்ட பிரதேசங்களிலும் பிரிவினை சக்திகளுக்கு அது ஆதரவு அளித்து வருகிறது. 2020ஆம் ஆண்டில் மட்டும், அந்தச் சக்திகளின் சுமார் 70 திட்டப்பணிகளுக்கு கோடி டாலருக்கும் மேலான உதவித் தொகையை வழங்கியுள்ளது.

அமெரிக்கத் தேசிய ஜனநாயக நிதியம், சீனாவைப் பிளவுப்படுத்தும் முயற்சி, முன்பு பலிக்கவில்லை, தற்போது மற்றும் எதிர்காலத்திலும் பலக்காது.