ரூபல்-ரூபாய் பணப் பரிவர்த்தணை முறைமை
2022-04-02 09:48:15

ரூபல் மற்றும் ரூபாய் மூலம் பணப் பரிவர்த்தணை வர்த்தக முறைமை செயலாக்கப்பட்டுள்ளது. இனிமேல் இம்முறைமையை தொடர்ந்து வலுப்படுத்துவதாக இந்தியாவில் பயணம் மேற்கொண்ட ரஷிய வெளியுறவு அமைச்சர் ராவ்ரோவ் ஏப்ரல் முதல் நாள் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கருடன் சந்திப்பு நடத்திய பிறகு அவர் கூறுகையில், அமெரிக்கா திணித்த நிர்பந்தம், ரஷிய-இந்திய கூட்டாளியுறவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. ரஷியாவும் இந்தியாவும், சொந்த நாணயம் வழியாக, எண்ணெய் படைக்கலங்கள் மற்றும் இதர பொருட்களின் வர்த்தகம் செய்யும் என்று தெரிவித்தார்.

ரஷியா-உக்ரைன் பகைமை மோதலுக்கு முடிவு காண்பதற்கான முக்கியத்துவத்தை அமைச்சர் ஜெய் சங்கர் வலியுறுத்தினார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அன்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.