இலங்கையில் அவசர நிலை அறிவிப்பு
2022-04-02 14:48:38

நாடளவில் பொது அவசர நிலையை மேற்கொள்வதாக இலங்கை அரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஏப்ரல் முதல் நாளிரவு அறிவித்தார்.

பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கிற்காகவும் சமூக வாழ்க்கைக்குத் தேவையான வினியோகம் மற்றும் சேவைகளைப் பேணிக்காப்பதற்காகவும் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இது, பொது பாதுகாப்புச் சட்டம் அரசுத் தலைவருக்கு வழங்கிய உரிமையும் ஆகும் என்று ராஜபக்ச அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதனிடையே, ஏப்ரல் முதல் நாளரிவு முதல் 2ஆம் நாள் காலை 6 மணிக்கு வரை கொழும்பு அமைந்துள்ள மேற்கு மாநிலத்தில் ஊரடங்கு அமலாக்கப்படுவதாக இலங்கை காவற்துறை அறிவித்தது.

தற்போது இலங்கை, அந்நிய செலாவணி குறைவு, அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, மின்சார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.