ஆஸ்திரேலியா-இந்திய தடையற்ற வர்த்தக உடன்படிக்கை கையொப்பம்
2022-04-02 19:06:07

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் வர்த்தகத் துறை அமைச்சர்கள் ஏப்ரல் 2ஆம் நாள் காணொளி வழியாக ஒரு முக்கியத் தடையற்ற வர்த்தக உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.

இவ்வுடன்படிக்கையின்படி, ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வணிகப் பொருட்களுக்கான சுங்கவரி பெரிதும் குறைக்கப்படும். ஆட்டு இறைச்சி, ஆட்டு ரோமம், நிலக்கரி, கடல் இறால் முதலிய பொருட்கள் இதில் அடங்கும்.