உக்ரைனில் உயிரியல் ஆய்வகம்: பன்னாட்டுச் சமூகத்தின் கேள்விகளுக்கு அமெரிக்கா பதில்
2022-04-02 19:17:06

உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்களை தடை செய்வதற்கான உடன்படிக்கையில் இணைந்த நாடாக விளங்கும் அமெரிக்கா, அதன் பல்வேறு விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். விளக்கம் மற்றும் கலந்தாய்வு உள்பட வழிமுறையில் பன்னாட்டுச் சமூகத்தின் கேள்விகளுக்கு கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லீஜியான் ஏப்ரல் முதல் நாள் தெரிவித்தார்.

தற்போது, அமெரிக்கா உக்ரைனில் ராணுவம் நோக்கிலான உயிரியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதை மென்மேலும் அதிகமான சான்றுகள் காட்டுகின்றன. அமெரிக்கா உலகளவில் உயிரியல் ரீதியான ராணுவ நடவடிக்கைகளை அதிகமாக மேற்கொண்டு வரும் நாடு. உலகளவில் சரிப்பார்ப்பு முறைமையின் உருவாக்கத்தை எதிர்க்கும் ஒரேயொரு நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் உயிரியல் ரீதியான ராணுவ நடவடிக்கை மீது பன்னாட்டுச் சமூகம் உரிய காரணங்களுக்காக சந்தேகம் கொண்டுள்ளது.