இந்தியா நேபாளம் இடையே முதலாவது பயணியர் தொடர்வண்டி சேவை துவக்கம்
2022-04-03 17:01:01

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே முதலாவது பயணியர் தொடர் வண்டி சேவை துவங்க உள்ளது என்று இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியும் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட நேபாளத் தலைமையமைச்சர்  தேவுபாவும் ஏப்ரல் 2ஆம் நாள் கூட்டாக அறிவித்தனர்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஜெய்நகரையும் நேபாளத்தின் குர்தா நகரையும் இணைக்கும் இந்த இருப்புப் பாதையின் மொத்த நீளம் சுமார் 35கிலோமீட்டராகும். இத்தொடர் வண்டியில் 1000 பயணிகள் வரை பயணிக்க முடியும். மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஏப்ரல் 3ஆம் நாளில் முதலாவது தொடர் வண்டியை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.