உலகில் உறுதியற்ற தன்மையைச் சமாளிக்க சீன - ஐரோப்பிய உறவின் உறுதித்தன்மை
2022-04-03 14:11:26

உலகின் அமைதியைப் பேணிக்காக்கும் இரண்டு பெரிய சக்திகளாக சீனாவும் ஐரோப்பாவும் விளங்க வேண்டும். இதன் மூலம்,  சீன- ஐரோப்பிய உறவின் உறுதித்தன்மை மூலமாக, சர்வதேச நிலைமையில் உறுதியற்ற தன்மையைச் சமாளிக்க முடியும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 1ஆம் நாறிவு காணொலி வாயிலாக ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது தெரிவித்தார்.

இதில்,  அமைதியைக் கூட்டாக பேணிக்காத்து, வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு முக்கிய அறிகுறி உலகிற்கு அனுப்பப்படுகிறது.  கோவிட்-19 தொற்று நோய் மற்றும் பிராந்திய மோதல் ஆகியவை ஒன்றாகச் சேர்ந்த சூழலில், இந்த நல்ல அறிகுறி மிகவும் முக்கியமானதாகவும், உலகில் உறுதியற்ற தன்மையின் பாதிப்பை குறைக்க முடியும் என்றும் கருதப்படுகிறது.

அமைதி, வளர்ச்சியின் முன்நிபந்தனை தான்.  உக்ரைன் நெருக்கடியில் அமைதி என்பது, சீனா மற்றும் ஐரோப்பாவின் கூட்டு வேண்டுகோள். அமைதியான முறையில் இந்நெருக்கடியைத் தீர்ப்பது ஐரோப்பாவின் அடிப்படை நலன்களுக்குப் பொருத்தமானது.  உக்ரைன் பிரச்சினையில்,  சீனாவும் ஐரோப்பாவும் ஒருமித்த கருத்துக்களை எட்டிள்ளன. அதாவது , அமைதி பேச்சுவார்த்தையையும்,தூதாண்மை வழியில் பிரச்சினையைத் தீர்ப்பதையும் பின்பற்ற வேண்டும். இதை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு, மூலோபாய சுயாட்சி என்பதை ஐரோப்பா கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது. உண்மையில், மூலோபாய சுயாட்சி, எப்போதும் ஐரோப்பாவின் இலக்காக உள்ளது. ஆனால்,  தற்போது உக்ரைன் நெருக்கடியைப் பயன்படுத்தி, அமெரிக்கா மீண்டும் மீண்டும் புதிய தடைகளை விதித்து வருகிறது. இதில் இருந்து,  ஐரோப்பாவுக்கு கடும் தீங்கு விளைவித்துள்ளது. ஐரோப்பாவின் மூலோபாய சுயாட்சியின் முன்னேற்றப் போக்கில் தடை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா, சொந்த நலன்களைக் கருத்தில் கொண்டு, உண்மையைப் பார்த்து, கொந்தளிப்பான உலகிற்கு நிலையான காரணிகளை வழங்க வேண்டும்.

உலகில் இரண்டு பெரிய சக்திகளாவும், பெரிய சந்தைகளாகவும், பெரிய நாகரிகங்களாகவும் விளங்கும் சீனாவும் ஐரோப்பாவும் ஒத்துழைப்புடன் செயல்பட்டால், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மேலதிக நேர்மறையான ஆற்றலைக் கொண்டு வரும்.