இலங்கையில் அமைச்சர்களின் பதவி விலகல்
2022-04-04 18:30:22

இலங்கையில் 20க்கும் அதிகமான அமைச்சர்கள் ஏப்ரல் 3ஆம் நாளிரவு கூட்டாக தங்களது பதவி விலகல் கடிதத்தை சமர்பித்தனர். ஆனால், தலைமையமைச்சர் மகிந்த ராஜாபக்சா பதவியிலிருந்து விலகவில்லை. எரிசக்தி மற்றும் மின் பற்றாக்குறையைத் தீர்க்கும் புதிய திட்டவரைவு விவாதிக்கப்பட்டு வருவதாக இலங்கைத் தலைமையமைச்சர் மாளிகை தெரிவித்தது.

சிறிது நாள்களுக்குள், புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் என்று உள்ளூர் ஊடகங்கள் கணித்துள்ளது.

தற்போது, அன்னிய செலாவணி குறைவு, உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, மின்சார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளால் கடும் பாதிப்பு இலங்கையில் ஏற்பட்டுள்ளது. அதற்காக, மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மார்ச் 31ஆம் நாள் இரவு தொடங்கி, இலங்கையில், பலமுறை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், நாட்டில் அவசர நிலையை அரசுத் தலைவர் கோத்தபய ராஜபட்ச ஏப்ரல் முதல் நாள் இரவு அறிவித்துள்ளார்.