பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு
2022-04-04 16:25:06

பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான் கானின் முன்மொழிவை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழ் அவையைக் கலைப்பதாக அந்நாட்டின் அரசுத் தலைவர் ஆரிஃப் ஆல்வி 3ஆம் நாள் அறிவித்தார்.

இம்ரான் கான் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற கீழ் அவைத் துணை தலைவர் காசிம் கான் சுரி அன்று நிராகரித்தார். இதையடுத்து, பொதுத் தேர்தல் முன்கூட்டியே நடத்தும் விதமாக, நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டுமென அரசுத் தலைவர் ஆரிஃப் ஆல்வியிடம் முன்மொழித்ததுடன், இடைக்கால அரசை நிறுவுவதாகவும் இம்ரான் கான் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய போது தெரிவித்தார்.