கலிபோர்னியா மாநிலத் தலைநகரில் கடும் துப்பாக்கிச் சூடு
2022-04-04 16:46:04

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தலைநகரான சாக்ரமெண்டோவில் 3ஆம் நாள் விடியற்காலையில் கடும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. அதில் 6பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். 12பேர் காயமடைந்தனர் என்று காவற்துறை தெரிவித்தது.

சாக்ரமெண்டோவிலுள்ள வணிக சாலையில் ஒருவர் மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். காவற்துறையினர் வருவதற்கு முன்பே அவர் தப்பி ஓடிவிட்டார். துப்பாக்கியில் சுட்டவர் ஒரு நபர் மட்டுமல்ல என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கொலையாளி பற்றி மக்கள் காவற்துறைக்கு துப்பு கொடுக்குமாறு காவற்துறை வேண்டுகோள்  விடுத்துள்ளது.

இத்துப்பாக்கி சூட்டின் நோக்கம் குறித்து இதுவரை தெரியில்லை.