2050ஆம் ஆண்டுக்குள் 7 அணுமின் நிலையங்களைக் கட்டியமைக்க பிரிட்டன் திட்டம்
2022-04-04 16:26:54

பிரிட்டனின் உள்நாட்டு எரிசக்தி விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, 7 அணுமின் நிலையங்கள் புதிதாக கட்டியமைக்கப்படும் என்று அந்நாட்டின் வணிக, எரிசக்தி மற்றும் தொழில் வியூகத் துறை அமைச்சர் குவாசி குவார்டெங் ஏப்ரல் 2ஆம் நாளிரவு செய்தி ஊடகத்திடம் தெரிவித்தார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே மோதல் மூண்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

2050ஆம் ஆண்டுக்குள் பிரிட்டனில்  6 முதல் 7 அணுமின் நிலையங்கள்  உருவாக்கப்படும். வரும் ஏப்ரல் 7ஆம் நாள் புதிய எரியாற்றல் பாதுகாப்புக்கான தொலைநோக்குத் திட்டத்தை பிரிட்டன் அரசாங்கம் வெளியிடும். 2030ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சமாக இரண்டு புதிய பெரிய அளவிலான அணுமின் நிலையங்களைக் கட்டுவதற்கு அரசு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.