அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பரவல் மோசமாகி வருகிறது
2022-04-05 18:57:59

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் மோசமாகப் பரவி வருகிறது. அமெரிக்க செய்தி ஊடகங்கள் 4ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, பறவை காய்ச்சல் அந்நாட்டின் 23மாநிலங்களில் பரவியுள்ளது. 2கோடியே 70லட்சம் வீட்டுப்பறவைகள் கொல்லப்பட்டன.

அதே வேளையில், வசந்த காலத்தில் பறவைகளின் வலசை போதலுடன், அமெரிக்காவின் பறவைக் காய்ச்சல் தொடர்ந்து தீவிரமாகும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.