சீன-உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பு
2022-04-05 19:10:19

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஏப்ரல் 4ஆம் நாள் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குலேபாவுடன் தொலைப்பேசி மூலம், உக்ரைன் நிலைமை குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

ரஷிய-உக்ரைன் நிலைமையை எடுத்துரைத்த குலேபா மேலும் கூறுகையில், பஞ்ச சீலக் கொள்கையைப் பின்பற்றி வரும் சீனா, அமைதி காக்கும் முக்கியமான சக்தியாகும். சீனாவின் சர்வதேசச் செல்வாக்குக்கு உக்ரைன் முக்கியத்துவம் கொடுக்கிறது. சீனாவுடன் தொடர்பை நிலைநிறுத்த விரும்புகிறது. போர் நிறுத்தத்துக்கு சீனா தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்றும் விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

வாங் யீ கூறுகையில், உக்ரைன் பிரச்சினை குறித்து, அமைதிக்காகப் பேச்சுவார்த்தையை ஊக்குவிப்பது, சீனாவின் அடிப்படை மனப்பான்மை. சீனா புவிசார் அரசியல் தன்னலங்களை நாடாது. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினாற் போல சீனா ஒருபோதும் செய்யாது. அமைதியை மனமார எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, நிலையான தீர்வைக் காண, உக்ரைன் முயற்சித்து வருகிறது. உக்ரைன், ஐரோப்பாவின் நுழைவாயிலாக அமைய விரும்புகிறது என்று குலேபா தெரிவித்தார். அது குறித்து வாங் யீ கூறுகையில், இவ்வாயில் ஐரோப்பிய அமைதி, உக்ரைன் வளர்ச்சி மற்றும் சீன-ஐரோப்பிய ஒத்துழைப்பு என்ற திசையில் செல்ல முடியும் என்று விருப்பம் தெரிவித்தார்.