ரஷியா மீதான தடை உலகப் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு
2022-04-05 18:39:07

ரஷிய-உக்ரைன் மோதல் நீடித்து வருவதுடன், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் மற்றும் ரஷியாவுக்கிடையே உள்ள பரஸ்பர தடை நடவடிக்கைகளும் தீவிரமாகியுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் தடை நடவடிக்கைகளால், எதிர்காலத்தில் உலக விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட வாய்ப்புண்டு. உலகப் பண வீக்கம் மற்றும் மக்களின் வாழ்வாதார சுமையை அதிகரித்து உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஐ.நா வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாடு மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாண்டின் உலகப் பொருளாதாரம் முன்பு 3.6விழுக்காட்டிலிருந்து 2.6விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டது. ரஷிய-உக்ரைன் மோதல் தான் இந்த குறைப்புக்கான முக்கிய காரணம் என சுட்டிக்காட்ட்பட்டது.