கோவிட்-19 சிகிச்சையில் பாரம்பரிய சீன மருந்துகள் பயனளிக்கிறது : உலக சுகாதார அமைப்பு அறிக்கை
2022-04-05 20:04:32

கோவிட்-19 தொற்று நோய் சிகிச்சையில், பாரம்பரிய சீன மருந்துகள் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது என்று உல சுகாதார அமைப்பு அண்மையில் தெரிவித்தது. மேலும், இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள், சீனப் பாரம்பரிய மருத்துவத்தையும் மேற்கத்திய மருத்துவத்தையும் ஒன்று சேர்த்து மேற்கொள்ளும் மருத்துவ வழிமுறையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஊக்கம்  அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31ஆம் நாள் உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில், கோவிட்-19 சிகிச்சையில் பாரம்பரிய சீன மருந்துகள் குறித்து வல்லுநர்கள் மதிப்பீட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. பாரம்பரிய சீன மருந்துகள் கோவிட்-19 தொற்று நோய் சிகிச்சைக்குப் பயனளிக்கிறது. குறிப்பாக, லேசான மற்றும் சாதாரண பாதிப்புக்கான சிகிச்சையில் அதிக பயன் தருகிறது. பாரம்பரிய சீன மருந்துகள் எடுத்துக் கொண்ட பிறகு வைரஸ் உடலில் இருந்து நீக்கும் நேரம் குறைக்கப்படலாம். மேலும், தீவிர நோயை உண்டாக்கும் அபாயத்தை பயனுள்ளதாக குறைக்க முடியும் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.