உலகளவில் கோவிட்-19 நோயால் 48 கோடி மக்களுக்குப் பாதிப்பு
2022-04-05 16:54:29

உலக சுகாதார அமைப்பு 4ஆம் நாள் வெளியிட்ட புதிய தகவலின்படி, உலகளவில் கோவிட்-19 நோயால் 48 கோடியே 97 இலட்சத்து 79 ஆயிரத்து 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 61 இலட்சத்து 52 ஆயிரத்து 95 பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 இலட்சத்து 18 ஆயிரத்து 294 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 1758 பேர் உயிரிழந்துள்ளனர்.