ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த அமெரிக்கா
2022-04-06 17:42:17

ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கக் கூடிய ஏவுகணை சமீபத்தில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதாக அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் மேம்பட்ட ஆய்வு நிறுவனம் 5ஆம் நாள் அறிவித்தது.

ரஷியாவுடன் பதற்றமான உறவைத் தீவிரப்படுத்தாமல் தவிர்க்கும் வகையில், மார்ச் பாதியில் நடைபெற்ற இந்த ஏவுதல் தகவல் 2 வாரம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது என்று அமெரிக்க சி.என்.என் செய்தி நிறுவனம், தேசியப் பாதுகாப்பு அமைச்சின் ஒரு அதிகாரியின் கூற்றை மேற்கோள் காட்டித் தெரிவித்தது.