வெளிப்படையானது: 21ஆம் நூற்றாண்டுப் பனிப் போரின் சதியாளர் அது தான்!
2022-04-06 20:42:26

உக்ரைன் பதற்றம், பனிப் போரின் சதியாளரான அமெரிக்கா, 21ஆம் நூற்றாண்டில் உருவாக்கியுள்ள புதிய பொறி ஆகும். ரஷியாவின் சக்தியைப் பலவீனப்படுத்தல், ஐரோப்பாவைக் கட்டுப்படுத்துதல்,  உலகில் தனது மேலாதிக்கத்தைப் பேணிக்காத்தல் ஆகியவை அதன் உள்நோக்கமாகும்.

கடந்த சில தசாப்தங்களில், அமெரிக்காவும் அதன் தலைமையிலான நேட்டோவும், அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் ரஷியாவின் சக்தியை பலவீனப்படுத்தி வருகின்றன. அதன் மூலம், அந்நாட்டில் பிளவை ஏற்படுத்தி, அந்நாட்டை பலவீனப்படுத்துவது தான் இலக்கு.

உண்மையில், அதே மாதிரியான நாடகம், சோவியன் யூனியனில் நடந்தது.  சோவியன் யூனியன் வீழ்ச்சியடைந்த பிறகு, அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ, 5 முறை கிழக்கை நோக்கி விரிவடைந்தது. ரஷியாவின் பாதுகாப்பு தொடர்ச்சியாக சுருக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ரஷியா மீது அடிக்கடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பொறியை உருவாக்குவதற்காக, அமெரிக்கா பல ஆண்டுகளாக முயன்றுள்ளது.  இதற்காக, உக்ரைனில் வண்ணப் புரட்சியை வாஷிங்டன் அடுத்தடுத்து 2 முறை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. வண்ணப் புரட்சியையும், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலம், ரஷியாவை பனிப் போர் என்ற பொறிக்குள் சிக்க வைக்க முயல்கிறது.

உக்ரைன் நெருக்கடி தீவிரமாகிய பிறகு,  அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டணியும் ரஷியா மீது வரலாற்றில் இல்லாத அளவிற்கு புதிய தடைகளை விதித்துள்ளன. இத்தடையில் இருந்து ரஷியாவின் பூனை மற்றும் நாய் போன்ற விலங்குகள் கூட தப்பிக்க முடியவில்லை. அதன் மூலம், ரஷியாவைப் பலவீனமாக்கவும்,  அரசியல் தலைவர்களின் தீர்மானத்தை மாற்றவும் முயல்கின்றன.

இதுவே, பனிப்போரில் ஒரு மாதிரியான தடைக் கொள்கையாக கருதப்படுகிறது. மீண்டும் தந்திரத்தை செயல்படுத்தி அமெரிக்கா, ஐரோப்பாவையும் அபாயமான நிலைக்குள் சிக்க வைத்து,  ஐரோப்பாவின் தொலைநோக்கு சுயாட்சியை பலவீனப்படுத்துவதை எதிர்பார்க்கிறது.