ரஷியாவின் தானிய ஏற்றுமதியில் கட்டுப்பாடு
2022-04-06 10:47:35

இவ்வாண்டில் ரஷியா மேலும் கவனமான மனப்பாங்குடன் தானிய ஏற்றுமதி செய்யவுள்ளதாக அந்நாட்டின் அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் தெரிவித்தார். மேலும், வேளாண், தொழிற்துறை, மீன்பிடித் தொழில் முதலிய துறைகளில் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் அளவை ரஷியா இயன்ற அளவில் குறைக்கும் என்றும் அவர் செவ்வாய்கிழமை ஒரு கூட்டத்தில் கூறினார்.

இதனிடையில், ரஷியாவின் மீது புதிய சுற்று தடை நடவடிக்கை திட்டம் ஒன்றை ஐரோப்பிய ஆணையம் அதே நாள் முன்வைத்தது. ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி, அந்நாட்டின் கப்பல்கள் ஐரோப்பிய ஒன்றிய துறைமுகங்களுக்குள் நுழைவு ஆகியவற்றுக்குத் தடை செய்வது இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஸ்பேயின், எஸ்டோனியா, ருமேனியா, லாட்வியா ஆகிய நாடுகள் 5ஆம் நாள் ரஷிய தூதாண்மை அதிகாரிகளை விரட்டியடிவதாக அறிவித்துள்ளன.