சீனா-கனடா உறவு பற்றி இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பு
2022-04-06 09:50:13

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ அழைப்பை ஏற்று, ஏப்ரல் 5ஆம் நாள் கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி அம்மையாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

வாங் யீ கூறுகையில், இருநாட்டு உறவைச் சீனா எப்போதுமே நீண்டகால கண்ணோட்டத்தில் பார்த்துக் கையாண்டு வருகிறது. இருநாட்டு உறவின் தற்போதைய நிலைமை இருதரப்பின் நலன்களுக்கு ஏற்றதல்ல. தொடர்புடைய பிரச்சினைகளைக் கனடா சரியான முறையில் எதிர்நோக்கவும் சீனாவுடன் இணைந்து கூட்டாகப் பாடுபட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஜோலி அம்மையார் கூறுகையில், சீனாவுடன் நேர்மையாகவும் திறந்த மனதுடனும் பழகி, இருநாட்டு உறவை சரியான பாதைக்குத் திரும்பச் செய்யவும், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நோய் தொற்று தடுப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் கனடா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

மேலும், உக்ரைன் பிரச்சினை குறித்து அவர்கள் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.