போர் மற்றும் தடையிலிருந்து அதிக ஆதாயம் அடையும் அமெரிக்கா
2022-04-06 18:34:27

ஐரோப்பாவைப் பொருத்தவரை, போர் மற்றும் தடைகளால், அகதி குடியேற்றம், பணம் வெளியேற்றம், எரியாற்றல் தட்டுப்பாடு முதலிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் அமெரிக்கா, போர் மற்றும் தடையிலிருந்து அதிக ஆதாயம் அடைந்து வருகிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லீச்சியன் 6ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

2014ஆம் ஆண்டு முதல், இவ்வாண்டு ஏப்ரல் முதல் நாள் வரையான 8 ஆண்டுகளில், அமெரிக்கா தலைமையிலான நாடுகள், ரஷியாவின் மீது 8068 தடை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ரஷியா, ஈரானைத் தாண்டி, உலகில் மிக அதிகத் தடை விதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது என்றும் சாவ் லீச்சியன் தெரிவித்தார்.