இலங்கையில் அவசர நிலை ரத்து
2022-04-06 17:28:15

இலங்கையில் நாடளவில் அமல்படுத்தப்பட்டிருந்த அவசர நிலையை ரத்து செய்வதாக அந்நாட்டு அரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்சே 5ஆம் நாள் அறிவித்தார். அன்னிய செலாவணிப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, மின்சார விநியோக சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளை இலங்கை எதிர்நோக்கி வருவதால் போராட்டங்களை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்தே கடந்த 1ஆம் நாள் அவசர நிலையை ராஜபக்சே அறிவித்தார்.

இலங்கை அமைச்சரவையில் 20க்கும் மேலான அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் பல்வேறு கட்சிகளும் அமைச்சரவையில் சேர்ந்து நெருக்கடியைக் கூட்டாக சமாளிக்குமாறு ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார்.