உலக சுகாதாரத் தினம்: உலக சுகாதார அமைப்பின் கூட்டறிக்கை
2022-04-07 18:21:43

ஏப்ரல் 7ஆம் நாள் உலக சுகாதார தினமாகும். இதை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பு 6ஆம் நாள் செய்திக் கூட்டறிக்கையை வெளியிட்டது. மனித குலம் மற்றும் பூமியின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் கூறுகையில், காலநிலை நெருக்கடியும் சுகாதார நெருக்கடியாகும் என்று தெரிவித்தார். மேலும், மாற்றம் ரீதியிலான தீர்வு கண்டு, புதைபடிம எரிபொருள் மீதான சார்பை குறைத்து, பூமியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.