உலகளவில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள உயிரியல் ரீதியிலான ராணுவ நடவடிக்கை பற்றிய ஆவணத்தை வெளியிட்ட ரஷியா
2022-04-07 18:26:47

உக்ரைன் உள்பட உலகளவில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள உயிரியல் ரீதியிலான ராணுவ நடவடிகைகள் பற்றிய  ஆவணத்தை ரஷியா 6ஆம் நாள் வெளியிட்டது. அதோடு, உயிரியல் ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதால் , சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அபாயங்களை ஏற்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

அன்று உயிரின பாதுகாப்பு விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு அவை நடத்திய கூட்டத்தில், ரஷியா இந்த ஆவணங்களை வெளியிட்டது. அதன்படி, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள 30 நாடுகளில் மக்கள் மற்றும் ராணுவப்  பயன்பாட்டிற்கான கிட்டத்தட்ட336 உயிரியல் ஆய்வகங்களுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்துள்ளது என்று இந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

1975ஆம் ஆண்டு, உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்களைத் தடை செய்வதற்கான ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இணைந்த அமெரிக்கா, 20 ஆண்டுகளில் அது தொடர்பான பலதரப்பு சரிப்பார்ப்பு முறைமையை எதிர்த்து வருகிறது என்று ரஷியா தெரிவித்தது. அமெரிக்காவின் செயலுக்கு கவலை அளிப்பதோடு, சர்வதேச சமூகம் இதன் மீது விழிப்புணர்வை நிலைநிறுத்த வேண்டும் என்றும் ரஷியா வேண்டுகோள் விடுத்துள்ளது.