போர் கூடிய விரைவில் நிறுத்துவது அவசரமாகும்!
2022-04-07 19:10:25

ஐ.நா பாதுகாப்பவை உக்ரைன் நிலைமை குறித்து 5ஆம் நாள் வெளிப்படையான கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் புச்சா சம்பவம் பற்றி மிகவும் கவனம் செலுத்தப்பட்டது. ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி கூறுகையில், உக்ரைன் நிலைமையைத் தணிவுப்படுத்திக் கூடிய விரைவில் போர் நிறுத்தம் என்பதே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பு ஆகும். சீனாவின் விருப்பமும் அதுவாகும். புச்சா சம்பவம் பற்றிய எந்த குற்றஞ்சாட்டும் உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். தீர்மானம் செய்யும் முன்பே, பல்வேறு தரப்புகள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றார். புச்சா சம்பவத்தை எப்படி பகுத்தறிவு மற்றும் புற நிலையுடன் சமாளிப்பதில் சர்வதேச சமூகத்துக்குச் சீனப் பிரதிநிதியின் உரை தெளிவான வழியை வழங்கியுள்ளது.

தற்போது, புச்சா சம்பவம் பற்றி ரஷியாவும் உக்ரைனும் ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டி வருகின்றன. புச்சா நகரில் அப்பாவி மக்களின் உடல்கள் இடக்கும் படங்கள் மற்றும் காணொளிகளை உக்ரைன் செய்தி ஊடகம் அண்மையில் வெளியிட்டது. ரஷியப் படை இதை செய்ததாக உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. இதை ரஷியா உறுதியாக மறுத்துள்ளதுடன், ரஷியப் படை வெளியேறிய பிறகு, மேற்கத்திய செய்தி ஊடகங்களுக்கு உக்ரைன் இயக்கியதாகும் என்று ரஷியா தெரிவித்தது. பாதுகாப்பவைக்கு தொடர்புடைய சான்றுகளை ரஷியா ஒப்படைத்துள்ளது.

புச்சா சம்பவத்தின் உண்மையை அறிய, சுதந்திரமான ஆய்வுக் குழுவை ஐ.நா உக்ரைனுக்கு அனுப்ப வேண்டும். பல்வேறு தரப்புகளும் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட்டு உண்மைக்குக் காத்திருக்க வேண்டும்.

ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு இந்த பொறுமை இல்லை. ரஷியா மீது புதிய சுற்று தடை நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளன. சுமார் 10 ஐரோப்பிய நாடுகள் ரஷிய தூதாண்மைப் பணியாளர்களைப் வெளியேற்றியுள்ளன. உண்மை இன்னும் உறுதி செய்யப்படாத இச்சம்பவம் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு சாக்குபோக்காக செயல்பட்டுள்ளன.

தற்போது, இச்சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணையைச் சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும். அதே வேளையில், மனித நேய நெருக்கடி ஏற்படாமல் தவிர்க்குமாறு, போர் நிறுத்தத்தையும் அமைதிப் பேச்சுவார்த்தையையும் ஊக்குவிக்க முயற்சி செய்ய வேண்டும்.