பெலோசியின் தைவான் பயணத்துக்குச் சீனா கடும் எதிர்ப்பு
2022-04-07 18:45:25

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைத் தலைவர் நான்சி பெலோசியின் தலைமையில் அமெரிக்க குழு தைவான் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்ளவிருப்பது குறித்து சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாங் லீச்சியென் 7ஆம் நாள் தெரிவித்தார்.

பெலோசி தைவானில் பயணம் மேற்கொண்டால், ஒரே சீனா என்ற கோட்பாடு மற்றும் சீன-அமெரிக்க 3 கூட்டறிக்கைகளின் விதியைக் கடுமையாக மீறும். சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைக் கடுமையாக சீர்குலைக்கும். சீன-அமெரிக்க உறவின் அரசியல் அடிப்படையையும் கடுமையாக தாக்கப்படும் என்று சாவ் லீச்சியென் சுட்டிக்காட்டினார்.