உலகில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்திய காரணம் அமெரிக்கா தான்
2022-04-07 20:25:24

சீனாவின் தைவான் பிரதேசத்தில் சுமார் 9கோடியே 50லட்சம் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்காவின் தொடர்புடைய துறை அண்மையில் முடிவெடுத்துள்ளது.  அமெரிக்காவின் தற்போதைய அரசு பதவியேற்ற பிறகு, 3ஆவது முறையாக தைவானுக்கு ஆயுதங்களை விற்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் இச்செயல், உலகளவில் குழப்பத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

உண்மை மிகவும் தெளிவானது. அதாவது,  தைவான் நீரிணையில் புதிதாகப் பதற்றம் ஏற்பட்டதன் காரணம்,  தைவானின் தற்போதைய நிர்வாகம்,  அமெரிக்காவை சார்ந்திருந்து சுதந்திரம் பெற முயல்கிறது. மறுபுறம், அமெரிக்காவில் சில அரசியல்வாதிகள், தைவான் மூலம் சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க முயல்கின்றனர்.

உலகளவில், ஒரே ஒரு சீனா மட்டுமே உண்டு. தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும். இது, மாற முடியாத வரலாறு மற்றும் உண்மையாகும். தைவானின் பாதுகாப்புக்கு இரு கரைகளுக்கிடையே அமைதி மற்றும் வளர்ச்சி என்பது அடிப்படை ஆதாரமாக உள்ளதே தவிர, அமெரிக்காவின் ஆயுதங்கள் அல்ல.  தைவானுக்கு ஆயுதங்களை விற்பது, அமெரிக்கா நடத்தும் தந்திரம் மட்டுமே. அமெரிக்காவின் கைகளிலுள்ள சதுரங்க வீரரின் தலைவிதி என்ன என்பதற்கு முன்கூட்டியே பதில் கிடைத்துள்ளது.