ஷாங்காயில் கொவிட்-19 தடுப்பில் முழு சீனாவின் உதவி
2022-04-08 18:50:26

கொவிட்-19 தொற்று பாதிப்புக்குள்ளான ஷாங்காய் மீது சீன மக்கள் அக்கறை செலுத்தி வருகின்றனர். கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் ஷாங்காய்க்கு உதவியளிக்கும் விதம், மருத்துவ சிகிச்சைக் குழுக்கள், நிவாரணப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்கள் முதலியவை சீனாவின் பல்வேறு இடங்களிலிருந்து ஷாங்காய்க்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுவரை, சீனத் தேசிய சுகாதார ஆணையம் சீனாவின் 15 மாநிலங்களிலிருந்து 38ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவப் பணியாளர்களை ஷாங்காய்க்கு அனுப்பியுள்ளது. தினசரி நோய் பரிசோதனை செய்யும் அளவு 23லட்சத்து 80ஆயிரத்தை எட்டியுள்ளது.