ஐ.நாவின் மனித உரிமை மன்றத்தின் உறுப்பினர் என்ற தகுநிலை: ரஷியா நீக்கம்
2022-04-08 17:14:52

ஐ.நாவின் மனித உரிமை மன்றத்தின் உறுப்பினர் என்ற தகுநிலையை ரஷியா ஏப்ரல் 7ஆம் நாள் முன்கூட்டியே நிறுத்த ரஷிய வெளியுறவு அமைச்சகம் அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷியாவின் இந்தத் தகுநிலையைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா பொதுப் பேரவை அன்று ஏற்றுக்கொண்டது. இது, அரசியல் நோக்கம் கொண்ட சட்டபூர்வமற்ற செயலாகும். ரஷியா சொந்தமாகவே இத்தகுநிலையை நிறுத்துவது, மனித உரிமை துறையில் ரஷியாவின் சர்வதேசப் பொறுப்பை மீறவில்லை என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.