சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய சீன மருந்துகள்
2022-04-08 18:56:32

கொவிட்-19 சிகிச்சையில் பாரம்பரிய சீன மருந்துகளின் பங்களிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் உறுதியாக அங்கீகரித்துள்ளது. பாரம்பரிய சீன மருந்துகள் மேலும் அதிகமான சர்வதேச அங்கீகாரம் பெற்று வருவதையும் இது வெளிக்காட்டியுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லீச்சியன் 8ஆம் நாள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்ட பின், சீனாவின் தொற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சையில் பாரம்பரிய சீன மருந்துகள் பன்முகங்களிலும் ஆழமாகவும் பங்களித்து வருகின்றன. பாரம்பரிய சீன மருந்து மற்றும் மேற்கத்திய மருந்துகளின் பயன்பாட்டு ஒன்றிணைப்பு நோய்க்கான தடுப்பு மற்றும் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க பயன்களைத் தந்துள்ளன.

பாரம்பரிய சீன மருந்து சீனாவின் அரிய செல்வமாகவும் உலக மக்களின் செல்வமாகவும் விளங்குகிறது. கொவிட்-19 பாதிப்புக்குப் பின், அன்னிய நாடுகளின் நோய் தடுப்புக்குப் பாரம்பரிய சீன மருந்துகளின் உதவியைச் சீனா வழங்கியுள்ளது. 150க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்குப் பாரம்பரிய சீன மருந்துகளின் சிகிச்சை வழிமுறைகளை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 10 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்குத் தேவையான பாரம்பரிய சீன மருந்துகளை அனுப்பியுள்ளது என்று சாவ் லீச்சியன் கூறினார்.