இந்திய மின்சாரத் துறை மீது சீனா இணையத் தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்கா அவதூறு
2022-04-08 18:25:01

அமெரிக்கா வெளியிட்ட ஓர் அறிக்கையில் இந்திய மின்சாரத் துறை மீது சீனா இணையத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்பட்டது.  அமெரிக்காவின் இந்தச் சந்தேகத்தை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ்லீஜியான் 8ஆம் நாள் மறுத்ததோடு, பன்னாட்டுச் சமூகம், குறிப்பாக, சீனாவின் அண்டை நாடுகள், அமெரிக்காவின் நோக்கத்தை அறிந்து கொள்ளும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சாவ் லீஜியான் மேலும் கூறுகையில்

செய்தி ஊடகங்கள் வழங்கிய நேர்காணல் காணொளியில்,  சொந்தமான இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்திய அதிகாரி வலியுறுத்தினார். இணையத் தாக்குதல் சீனாவுடன் தொடர்பு உடையது என்று கூறவில்லை. இது எந்த நாட்டில் இருந்தும் நடக்கக் கூடியது என்று தெரிவித்தார்.

உண்மையில், சீனாவின் இணைய பாதுகாப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைகளில், சீனா உள்பட உலகின் அதிகமான நாடுகளை இலக்கு வைத்து இணையத் தாக்குதல் நடத்தும் விதம் அமெரிக்க அரசு செயல்பட்டு வருகிறது என்றும் சாவ் லீஜியான் சுட்டிக்கட்டினார்.