ஐ.நா மனித உரிமைகள் மன்றத்திலிருந்து ரஷியா நீக்கம்
2022-04-08 10:37:26

ஐ.நா பொதுப் பேரவை 7ஆம் நாள் தீர்மானம் ஒன்றை ஏற்றுக்கொண்டு, ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ரஷியாவின் உறுப்பு உரிமையைத் தற்காலிகமாக நீக்குவதென அறிவித்துள்ளது. அதனையடுத்து, மனித உரிமைகள் மன்றத்திலிருந்து அதே நாளில் விலகுவதென ரஷியா தீர்மானித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தொடர்ந்து ரஷியாவின் மீது புதிய தடை நடவடிக்கைகளை வெளியிட்ட சூழ்நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 2 நாடுகளின் தலைவர்களின் மீது தடை நடவடிக்கை மேற்கொள்வதாக ரஷியா 7ஆம் நாள் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் தலைமை அமைச்சர் மொலிசன், பாதுகாப்பமைச்சர் டாடன் உள்ளிட்ட 228 பேரும், நியூசிலாந்தின் தலைமை ஆளுநர் கீரோ, தலைமை அமைச்சர் ஆத்யென் உள்ளிட்ட 130 பேரும் இந்தத் தடைப் பட்டியலில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.