தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு வாக்கெடுப்பு:பாகிஸ்தான்
2022-04-08 10:03:49

ஏப்ரல் 9ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில், தலைமை அமைச்சர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உமால் அடா பண்டிர் 7ஆம் நாளிரவு அறிவித்தார்.

அவர் கூறுகையில், இவ்வாக்கெடுப்பு முடிவடையும் முன், இக்கூட்டம் ஒத்திவைக்கப்படக் கூடாது. இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், புதிய தலைமை அமைச்சர், நாடாளுமன்றத்தால் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.