கொந்தளிப்பான உலகுக்கு மத்தியில் குளிர்கால ஒலிம்பிக் குறிக்கோள் தந்த மதிப்பு!
2022-04-08 20:15:46

சர்வதேச சமூகத்திற்கு தனது வாக்குறுதியை சீனா முழுமையாக நிறைவேற்றியுள்ளதோடு, உலகிற்கு எளிமை, பாதுகாப்பு மற்றும் சிறந்ததொரு ஒலிம்பிக் நிகழ்ச்சியை நடத்திக் காட்டியுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 8ஆம் நாள் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான பாராட்டு மாநாட்டில் உரைநிகழ்த்திய போது இவ்வாறு தெரிவித்தார்.

உலகளவில் கோவிட்-19 தொற்று இன்னும் கடுமையாக உள்ள சூழலில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் மீது முழு உலகம் கவனம் செலுத்தி வந்தது. இந்த சவாலை சீனா வெற்றிகரமாக கடக்க முடியுமா என்று கேள்வி எழுந்தது. இதற்கான பதிலை சீனா செயலில் காட்டி விட்டது. போட்டி நடைபெற்ற போது, மூடிய வளையப்பகுதியில்  கோவிட்-19 பாதிப்பு விகிதம், 0.45 விழுக்காடு மட்டும். பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. துல்லியமான மற்றும் பயனுள்ள நோய்த தடுப்புப் பணி, பெரிய சர்வதேச நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுபவங்களை வழங்கியுள்ளது.

கொந்தளிக்கும் உலகில், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் குறிக்கோள், உலக மக்களுக்கு மத்தியில் ஒற்றுமை மற்றும் நட்புறவின் விதைகளை விதைத்து, ஒரு பகிர்வு எதிர்காலத்திற்கான கண்ணோட்டத்தைப் பரப்பியது. அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் உரையை போல,  பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்,  அமைதி மற்றும் நட்பு ரீதியான நிகழ்ச்சியாகவும், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு ரீதியான நிகழ்ச்சியாகவும், உலகிற்கு ஊக்கம் தரும் நிகழ்ச்சியாகவும் திகழ்ந்து சுட்டிக்காட்டத்தக்கது.