சீன-செர்பியா வெளியுறவு அமைச்சரகளின் தொடர்பு
2022-04-09 16:23:05

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ செர்பியா வெளியுறவு அமைச்சர் செலகோவிசுடன் ஏப்ரல் 8ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

செலகோவிச் கூறுகையில், கொந்தளிப்பான சர்வதேச சூழ்நிலையில் செர்பியா-சீன ஒத்துழைப்பு சீராக முன்னேறி வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் இரு நாடுகள் கூட்டாக ஈடுபடுவதுடன், இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகள் சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனாவுடன் நட்புறவை ஆழமாக்கி, அறைக்கூவல்களைக் கைகோர்த்துக்கொண்டு சமாளிக்க செர்பியா விரும்புவதாகத் தெரிவித்தார்.

வாங்யீ கூறுகையில், சர்வதேச மற்றும் பலதரப்பு மேடைகளில் செர்பியாவுடன் ஒன்றுக்கொன்று ஆதரவு அளிக்க சீனா விரும்புகிறது. இரு நாட்டு அரசுத் தலைவர்கள் உருவாக்கிய முக்கிய பொதுக் கருத்துக்களைக் கூட்டாகச் செயல்படுத்தி, இரு நாட்டுத் தாராள வர்த்தக உடன்படிக்கையில் வெகுவிரைவில் கையொப்பமிட்டு, இரு நாட்டு ஒத்துழைப்புகளுக்கு இயக்காற்றலை ஊட்ட சீனா விரும்புவதாக தெரிவித்தார்.