பொருளாதார நிலைமை பற்றிய கலந்துரையாடல் கூட்டம்
2022-04-09 16:42:31

நிபுணர் மற்றும் தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் 7ஆம் நாள் சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங்கின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொருளாதார நிலைமை பற்றிய ஆய்வு செய்யப்பட்டதோடு, அடுத்த கட்ட பொருளாதாரப் பணியைச் செவ்வனே மேற்கொள்வதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறியப்பட்டுள்ளன.

லீ கெச்சியாங் கூறுகையில், இவ்வாண்டிலிருந்து, தோழர் ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் வலுவான தலைமையில், பல்வேறு இடங்களின் பல்வேறு வாரியங்கள் நாட்டின் ஏற்பாடுகளைச் செயல்படுத்தி, இன்னல்கள் மற்றும் சவால்களை ஆக்கப்பூர்வமாக சமாளித்து வருகின்றன. சீனப் பொருளாதாரம் பொதுவாக சரியான வரம்புக்குள் செயல்பட்டு வருகிறது. தற்போது சிக்கலாக மாறி வரும் உலக நிலைமை, உள்நாட்டு நோய் தொற்று பரவல், எதிர்பாராத காரணிகள் ஆகியவை, பொருளாதாரத்தின் சீரான செயல்பாட்டுக்கு நிலையற்ற தன்மை மற்றும் சவால்களைக் கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் நம்பிக்கையுடன் செயல்பட்டு, வளர்ச்சியை நிலைநிறுத்தப் பாடுபட வேண்டும். கொள்கை நடவடிக்கைகளை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்துவதோடு, புதிய திட்டங்களையும் வகுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.