பிரிக்ஸ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் கூட்டம்
2022-04-09 16:47:59

 இவ்வாண்டில் பிரிக்ஸ் நாட்டு நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் முதலாவது கூட்டம் 8ஆம் நாள் காணொளி வழியாக நடைபெற்றது. உயர்தர கூட்டுறவை நிறுவி, உலகளாவிய வளர்ச்சிக்கான புதிய யுகத்தைக் கூட்டாக உருவாக்குவது என்ற தலைப்பின் கீழ், ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை மற்றும் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு, புதிய வளர்ச்சி வங்கி, உள்கட்டமைப்புக்கான முதலீடு, பிரிக்ஸ் நிதி மற்றும் நாணய சிந்தனை கிடங்கின் இணையம் உள்ளிட்ட கருப்பொருட்களிலான விவாதங்கள் இக்கூட்டத்தில் நடத்தப்பட்டதோடு, பிரிக்ஸ் நிதி மற்றும் நாணய ஒத்துழைப்பின் எதிர்காலச் சாதனை குறித்த கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

சீன நிதி அமைச்சர் லியூ குன் இக்கூட்டத்தில் பேசுகையில், 2022ஆம் ஆண்டில் சீனா தொடர்ந்து பல்வேறு தரப்புகளுடன் இணைந்து பிரிக்ஸ் நிதி மற்றும் நாணய ஒத்துழைப்பை ஆக்கமுடன் முன்னேற்றி, பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 14ஆவது சந்திப்புக்கு ஆயத்தம் செய்யும் என்று கூறினார்.

நடப்பு ஆண்டிற்கான தலைமைப் பதவில் இருக்கும் சீனா ஆற்றியுள்ள பங்கினை இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பாராட்டியதோடு, சீனா முன்வைத்த தொடர்புடைய முன்மொழிவுகளையும் வரவேற்றனர்.