உக்ரைனைப் பயன்படுத்தி ரஷியாவுடன் போரிடும் நேட்டோ
2022-04-09 18:06:51

ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜகரோவா 8ஆம் நாள் இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், ரஷிய-உக்ரைன் மோதலில் பங்கெடுப்பதை நேட்டோ நிராகரித்த போதிலும், உண்மையிலே அது முன்னதாகவே உக்ரைனுக்கு ஆதரவளித்து, உக்ரைனைப் பயன்படுத்தி ரஷியாவுடன் போரிட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்க வணிக அமைச்சகத்தின் தொழிற்துறை மற்றும் பாதுகாப்பு பணியகம் அதேநாள் கூறுகையில், ரஷியாவுக்கு எதிரான ஏற்றுமதி கட்டுப்பாட்டுக் கூட்டணியில் ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டின், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தது.

தவிரவும், அமெரிக்காவின் மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்டு புவர் 8ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், ரஷியாவின் வெளிநாட்டு நாணய வினியோகிப்பவரின் கடன் மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.