பாகிஸ்தான் தேசிய பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானம்
2022-04-10 16:37:32

பாகிஸ்தான் தேசிய பேரவையில் 10ஆம் நாள் அதிகாலை தலைமை அமைச்சர் இம்ரான் கான் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்நாட்டின் வரலாற்றில் தேசிய பேரவையில் பதவி நீக்கப்பட்ட முதலாவது தலைமை அமைச்சராக அவர் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி கூட்டணி முன்வைத்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 174 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். பாகிஸ்தான் அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற நடைமுறை விதிகளின்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தேசிய பேரவையில் 50 விழுக்காடு, அதாவது 172க்கு மேலான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.