24 அமெரிக்க பேருக்கு ஈரான் தடை நடவடிக்கை
2022-04-10 16:24:34

ஈரான் வெளியுறவு அமைச்சகம் ஏப்ரல் 9ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அமெரிக்காவைச் சேர்ந்த 24 பேர் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து மனித உரிமையை மீறியதன் காரணமாக, அவர்கள் தடை நடவடிக்கை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மக்கள் மருந்துகள் மற்றும் மருத்துவச் சேவையைப் பெறுவதை அமெரிக்கா தடுப்பதன் மூலம், ஈரான் மக்களின் வாழ்க்கை தரத்தைச் சீர்குலைத்துள்ளது. குறிப்பாக, கோவிட்-19 பரவல் நிலைமையில், அமெரிக்காவின் இச்செயல், ஈரான் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, அவர்களின் உயிர் பாதுகாப்பைப் பாதித்துள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.