முதல் சீன-ஆப்பிரிக்க பண்பாட்டுப் பேச்சுவார்த்தை மாநாடு
2022-04-10 16:37:41

சீன சமூக அறிவியல் கழகத்தின் தலைமைையிலும், சீன-ஆப்பிரிக்க ஆய்வகம் மற்றும் சீனாவிலுள்ள ஆப்பிரிக்க லீக் அலுவலகத்தின் கூட்டு ஏற்பாட்டிலும் முதல் சீன-ஆப்பிரிக்க நாகரிகப் பேச்சுவார்த்தை மாநாடு, 9ஆம் நாள் இணையம் மற்றும் நேரடியாக நடைபெற்றது.

நாகரிகப் பரிமாற்றத்தின் மூலம், புதிய யுகத்தில் சீன-ஆப்பிரிக்க பொது சமூகத்தின் ஆக்கப்பணியை முன்னேற்றுவது என்பது இம்மாநாட்டின் தலைப்பாகும்.

சீன-ஆப்பிரிக்க மானுட பண்பாட்டியல் பரிமாற்றத்திற்கு புதிய மேடையை உருவாக்குவது, சீன-ஆப்பிரிக்க நாகரிகப் பரிமாற்றத்தை ஆழமாக்குவது, புதிய யுகத்தில் சீன-ஆப்பிரிக்க  பொது சமூகத்தின் ஆக்கப்பணி மற்றும் மனிதகுல பொது எதிர்கால சமூகத்தின் ஆக்கப்பணிக்குப் பங்காற்றுவது ஆகியவை இம்மாநாட்டின் நோக்கமாகும்.