பணியிட பாதுகாப்பிற்கான 15 நடவடிக்கைகள்
2022-04-10 16:41:42

பணியிட பாதுகாப்பிற்காக சீன அரசவையின் பணியிட பாதுகாப்பு கமிட்டி அண்மையில் 15 நடவடிக்கைகளை வகுத்துள்ளது. நாடளவில் பணியிட பாதுகாப்பிற்கான பரிசோதனையை விரிவாகவும் உறுதியுடனும் மேற்கொண்டு, விபத்தை ஏற்படுத்திய தரப்பின் பொறுப்பைக் கண்டிப்பான முறையில் விசாரணை செய்து தண்டனை விதிக்க வேண்டும் என்பது இவ்வற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தெளிவான கோரிக்கையாகும். சீன அவசர மேலாண்மை அமைச்சகத்திலிருந்து 10ஆம் நாள் கிடைத்த தகவலின் மூலம் இது தெரிய வந்துள்ளது.

இந்த நடவடிக்கைகளின்படி, பொருளாதார வளர்ச்சி, நோய் தொற்று தடுப்பு, பணியிட பாதுகாப்பு ஆகிய பணிகளை ஒருங்கிணைந்த முறையில் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.