ஐரோப்பிய-ஆசிய பிரதேசப் பொருளாதாரத்துக்கு ரஷிய-உக்ரைன் மோதலின் பாதிப்பு
2022-04-11 17:15:38

ரஷியா-உக்ரைன் இடையேயான மோதல் மற்றும் ரஷியா மீதான மேலை நாடுகளின் தடை நடவடிக்கைகளால், ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் உள்ள புதிதாக வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. மதிப்பீட்டின்படி, இவ்வாண்டில் உக்ரைன் பொருளாதாரதம் 45.1 விழுக்காடும், ரஷிய பொருளாதாரம் 11.2 விழுக்காடும் வீழ்ச்சியடையும் என்று உலக வங்கி 10ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 நோய் தொற்று பரவலின் தொடர்ச்சியான பாதிப்புடன், ரஷிய-உக்ரைன் மோதல் பொருளாதாரத் தாக்கங்களைத் தீவிரமாக்கியுள்ளது. மதிப்பீட்டின்படி, இவ்வாண்டில் ஐரோப்பிய-ஆசிய பிரதேசத்தின் பொருளாதாரம் 4.1 விழுக்காடு குறையும். ஆனால் இம்மோதலுக்கு முன், இப்பிரதேசத்தின் பொருளாதாரம் 3 விழுக்காடு அதிகரிக்கும் என்ற மதிப்பீடு வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பொருளாதார வீழ்ச்சி, 2020ஆம் ஆண்டில் கோவிட்-19 நோய் தொற்றால் ஏற்பட்ட வீழ்ச்சியை விட 1 மடங்கு அதிகம் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.