ஏவுகணை சம்பவம் தொடர்பான புலனாய்வு முடிவு
2022-04-11 17:27:52

இவ்வாண்டு மார்ச் 9ஆம் நாள் பாகிஸ்தானின் மீது பிரம்மோஸ் ஏவுகணை ஒன்றைத் தவறாகச் செலுத்தியது தொடர்பான புலனாய்வை இந்தியா மேற்கொண்டது. பல அதிகாரிகள் இச்சம்பவத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று இந்திய ஊடகம் 10ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

இச்சம்பவம் முற்றிலும் தவிர்க்கப்பட கூடிய ஒரு நிகழ்வாகும். இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களுக்கு கடும் தண்டனை விரைவில் விதிக்கப்படும் என்று அரசு தகவல் தெரிந்தவர் ஒருவரின் கூற்றை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் நிலையான இயக்க நடைமுறையை மீறியது தெளிவானது என்று புலனாய்வு கமிட்டி தெரிவித்தது. மேலும், இத்தகைய சம்பவம் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதம், இந்திய வான்படை பல்வகை நடைமுறை விதிகளைச் சரிபார்த்து வருகிறது.