இம்ரான் கான் பதவி நீக்கம்:பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
2022-04-11 09:26:38

பாகிஸ்தான் முன்னாள் தலைமை அமைச்சர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 10ஆம் நாள் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர், லாகூர் உள்ளிட்ட பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் இம்ரான் கானைத் தலைமை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதலாவது தலைமை அமைச்சர் இம்ரான் கான் ஆவார்.