பிரான்ஸ் அரசுத் தலைவர் தேர்தலின் முதல் கட்ட வாக்கெடுப்பு
2022-04-11 10:37:25

பிரான்ஸ் ஊடகங்கள் 10ஆம் நாளிரவு வெளியிட்ட மக்கள் கருத்து கணிப்பின்படி, தற்போதைய அரசுத் தலைவர் இமானுவில் மேக்ரான், தீவிர வலது சாரி கட்சியான தேசியப் பேரணியின் வேட்பாளர் மரீன் லேபென் ஆகியோரின் வாக்குகள், அன்று நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலின் முதல் கட்ட வாக்கெடுப்பில் முன்னணியில் உள்ளன. அவர்கள் 2ஆவது கட்ட வாக்கெடுப்பில் போட்டியிடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

2ஆவது கட்ட வாக்கெடுப்பு, ஏப்ரல் 24ஆம் நாள் நடைபெறுவது குறிப்பிடப்பட்டது.