நேட்டோ மீதான சீனாவின் வேண்டுகோள்
2022-04-11 18:52:02

ரஷிய-உக்ரைன் மோதல் பற்றிய சீனாவின் நிலைப்பாட்டை நேட்டோ அமைப்பின் தலைமைச் செயலாளர் குறைகூறியது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லீஜியான் ஏப்ரல் 11ஆம் நாள் கூறுகையில், சீனாவின் மீதான உண்மையற்ற மற்றும் ஆத்திரமூட்டும் தன்மை வாய்ந்த கூற்றுகளைப் பரவல் செய்வதை நேட்டோ உடனடியாக நிறுத்த வேண்டும். ஐரோப்பாவின் நிலைமையை நேட்டோ குழப்பமாக்கியுள்ளது. ஆசியா மற்றும் உலக நிலைமையைக் குழப்பமாக்க முயலக் கூடாது என்று தெரிவித்தார்.

மேலும், அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் சீனா ஊன்றி நின்று வருகிறது. சீனாவின் வளர்ச்சி உலகத்தின் வாய்ப்பாகும். எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இது அமையாது என்றும் அவர் தெரிவித்தார்.