கடலில் அணு கழிவுநீரை வெளியேற்றும் திட்டத்தை ஜப்பான் நீக்க வேண்டும்
2022-04-12 20:24:37

ஃபுகுஷிமா அணு மின் நிலையத்திலிருந்து அணு கழிவு நீரை கடலில் வெளியேற்றும் திட்டத்தை கடந்த ஆண்டின் ஏப்ரல் 13ஆம் நாள் ஜப்பான் அரசு அறிவித்தது. அண்மையில், சர்வதேச சமூகத்தின் விமர்சனத்தையும் 1.8 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு மக்களின் எதிர்ப்பையும் டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் பொருட்படுத்தாமல், கடலுக்கு அடியில் அணு கழிவு நீர் வெளியேற்றத்துக்கான கால்வாய் கட்டுமானத்தை ஏப்ரல் நடுப்பகுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளது.

உச்சநிலை விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் மாசுபட்ட நீரில் பெருமளவு கதிரியக்கப் பொருட்கள் உள்ளன. சாதாரண நிலையில் வெளியேற்றப்பட்ட நீரிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. மேலும், கடலில் அணு கழிவுநீரை வெளியேற்றுவது வரலாற்றில் காணாத செயலாகும். இதில் தெரியாத பெரும் இடர்பாடுகள் உள்ளன. இந்நிலையில், ஜப்பானின் இச்சுயநலனுக்குரிய முடிவை கடந்த ஓராண்டில் சர்வதேச சமூகம் வன்மையாகக் கண்டித்து வருகிறது.

கடலில் கழிவுநீரை வெளியேற்றுவது, ஜப்பானின் சொந்த விவகாரம் அல்ல. உலகளாவிய கடல் உயிரினச் சூழல் பாதுகாப்புடனும் பல்வேறு நாட்டு மக்களின் உடல் நலத்துடனும் இது தொடர்புடையது. பூமியானது, மனிதகுலத்தின் பொது தாயகமாகும். அடுத்த தலைமுறையினருக்காக, ஜப்பான் செய்யும் இத்தவறான முடிவை உடனே நீக்க வேண்டும்.