லீ கெச்சியாங் தலைமையில் பொருளாதாரம் பற்றிய கலந்துரையாடல்
2022-04-12 16:39:11

சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங்கின் தலைமையில், சில உள்ளூர் அரசாங்கப் பொறுப்பாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் 11ஆம் நாள் ஜியாங்சி மாநிலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொருளாதார நிலைமை பற்றி ஆய்வு செய்த அவர், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான அடுத்த கட்ட பணிகளை செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அவர் கூறுகையில், சீனப் பொருளாதாரம் பொதுவாக சரியான வரம்புக்குள் இயங்கி, நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்து நம்பிக்கையை உறுதிப்படுத்துவதோடு, சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சூழலில் ஏற்படக் கூடிய எதிர்பாராத மாற்றங்கள் பற்றியும், பொருளாதார வீழ்ச்சியடையும் அழுத்தம் பற்றியும் விழிப்புடன் இருந்து, புதிய சவால்களை சீரான மற்றும் தீர்க்கமான முறையில் சமாளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். நோய் தொற்று தடுப்பையும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து, நிலைத்தன்மையின் அடிப்படையில் முன்னேற்றம் அடைய வேண்டும். உயர்தர வளர்ச்சியை முன்னேற்றி, மக்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்து, சீர்திருத்தம் மற்றும் திறப்பை வலுப்படுத்தி, வேலை வாய்ப்பு மற்றும் விலைவாசியை நிலைப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தின் சீரான செயல்பாட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.