ஷாபாஸ் ஷெரீஃபுக்கான சீனாவின் வாழ்த்துகள்
2022-04-12 18:50:42

12ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் சாவ் லிச்சியன் கூறுகையில்,

பாகிஸ்தான் தலைமை அமைச்சராக பதவி ஏற்ற ஷாபாஸ் ஷெரீஃபுக்கு சீனா வாழ்த்துகள் தெரிவிக்கின்றது. பன்முக நெடுநோக்கு கூட்டாளியான சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவு இரும்பு போன்று உறுதியானது. பாகிஸ்தானுடன் இணைந்து சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதையை கூட்டாக கட்டியமைப்பதையும் புதிய யுகத்தில் மேலும் நெருக்கமான சீன-பாகிஸ்தான் பொது சமூகத்தை உருவாக்குவதையும் சீனா எதிர்பார்க்கின்றது என்றார்.